பாரதீய கல்வி (பகுதி - 2)
கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒரு பள்ளியாவது இருப்பது கண்டறியப்பட்டது.
“எங்கள் கல்வி முறையை வேரோடு பிடுங்கிவிட்டீர்கள்”: ஆங்கிலேயரிடம் மகாத்மா காந்தி
வரலாற்றாசிரியர் தரம்பால் சிறு வயதில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டார் மேலும் காந்திய கொள்கைகளை ஆழ்ந்து பின்பற்றினார். அவர் மகாத்மா காந்தி லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸில் (Chatham House) நடைபெற்ற அரசு சர்வதேச விவகார நிறுவனத்தின் (Royal Institute of International Affairs), சந்திப்பில் பேசிய நீண்ட உரையை படித்தார். 1931 அக்டோபர் 20-ம் தேதி அன்று நடைபெற்ற இச்சந்திப்பில் காந்தி பின்வருமாறு கூறியுள்ளார்:
“...அது வர்ணனையை முடிக்காது. இந்த வருங்கால நாட்டின் கல்வி எங்களிடம் உள்ளது. எனது புள்ளி விவரங்களுக்கு முரணாக வெற்றிகரமாக சவால் செய்ய முடியும் என்கிற பயம் இல்லாமல் நான் சொல்கிறேன், இன்று இந்தியா ஐம்பது அல்லது நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட கல்வியறிவற்றது, அதேபோல் பர்மாவும் உள்ளது ஏனெனில் பிரிட்டிஷ் நிர்வாகிகள் அவர்கள் இந்தியாவுக்கு வந்த பொழுது இருந்த சூழ்நிலையை இருந்தவாறே கைப்பற்றாமல் அவைகளை வேருடன் பிடுங்கி எடுக்கத் தொடங்கினர். அவர்கள் மண்ணை நொண்டி வேரை பார்த்து விட்டு வேரை அம்பலமாக விட்டு விட்டனர், அவ்வாறு அந்த எழில்மிகு மரம் பட்டுப்போயிற்று. பிரிட்டிஷ் நிர்வாகிக்கு கிராமப் பள்ளிகள் போதுமானதாக தோன்றவில்லை, எனவே அவர் தன் திட்டங்களை கொண்டு வந்தார். இப்பொழுது ஒவ்வொரு பள்ளியிலும் இவ்வளவு சாதனங்கள், கட்டிடம் மற்றும் பல இதர ஏற்பாடுகள் இருக்க வேண்டும். அத்தகைய பள்ளிகள் எதுவும் முன்பு இல்லவே இல்லை. ஒரு பிரிட்டிஷ் நிர்வாகி விட்டுச்சென்ற புள்ளி விவர கணக்கெடுப்பை நடத்திய இடங்களில் பண்டைய பள்ளிகள், வாரியத்தினால் முடங்கும்படி ஆயிற்று ஏனெனில் இந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் கிடையாது, அது மட்டும் இல்லை ஐரோப்பிய முறையின்படி நிறுவப்பட்ட பள்ளிகள் மக்களுக்கு மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளதால் மக்களால் இவையை ஏற்க முடியவில்லை. இம்மக்களின் கட்டாய தொடக்கக் கல்வித் திட்டத்தை ஒரு நூற்றாண்டுக்குள் நிறைவேற்ற நான் சவால் விடுகிறேன். என்னுடைய மிக ஏழ்மையான நாடு இத்தகைய விலையுயர்ந்த கல்வி முறையைத் தக்கவைக்க இயலாது. எங்கள் நாடு பழைய கிராம பள்ளி ஆசிரியரை மீண்டும் நிறுவி, ஒவ்வொரு கிராமத்திலும் சிறுவர்-சிறுமிகளுக்கு ஒரு பள்ளியைக் கொண்டிருக்கும்.”
மேலும், 1939 ஆகஸ்ட்டில் செகாவில் சர் பிலிப் ஹார்டாக்கை கேள்வி கேட்க காந்தி தொடர்ந்தார்:
“...பிரிட்டிஷ் காலத்திற்கு முந்தைய காலங்களில் கிராமங்களில் இயங்கிய கல்வி விஷயத்தைத் நான் விட்டுவிடவில்லை. நான் பல கல்வியாளர்களுடன் கடிதப் பரிமாற்றம் செய்துகொண்டு இருக்கிறேன். பதிலளித்தவர்கள் எனது பார்வையை ஆதரிக்கிறார்கள், ஆனால் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும் அதிகாரம் ஏதும் பகிரவில்லை. என் பாரபட்சம் மற்றும் ஆழ்ந்த உள் உணர்வு நான் சாத்தம் ஹவுஸில் கூறியதை விடாப்பிடியாக பிடித்துக்கொள்ள வைக்கின்றன. நான் ஹரிஜனில் தயக்கத்துடன் எழுத விரும்பவில்லை. நான் மனதில் வைத்திருந்த ஆதரத்தினை நீங்கள் சவால் செய்துள்ளீர்கள் என்று மட்டும் எழுதுவேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.”
பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு சான்றுகளை வழங்க காந்தியின் இயலாமை பிரிட்டிஷாரை அப்பழுக்கற்றவர்களாக காட்டியது, இது நாட்டின் கல்வி முறைக்கு பாதகமாக அமைந்தது. காந்தியின் ஆழ்ந்த நம்பிக்கை மிகுந்த வார்த்தைகள் தரம்பாலை ஆராய்ந்து, ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரபூர்வமான சான்றுகளை தேடி எடுக்க தூண்டின. அவரது ஆய்வின் விளைவாக, 1983 ஆம் ஆண்டில் ‘தி பியூட்டிஃபுல் ட்ரீ’ (The Beautiful Tree) என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. காந்தி வீணடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட மரத்தையே தரம்பால் அவர் புத்தகத்தின் தலைப்பாக வைத்துள்ளார்.
விடாமுயற்சியுடன், அவர் ஹார்டாக் போன்ற அதிகாரிகளுக்கு ஆதாரங்களை வழங்கக்கூடிய ஆவணங்களை மட்டுமல்ல, இன்னும் பலவற்றைக் சேகரித்தார், இது பிரிட்டிஷ் கல்வி முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு இந்திய கல்வி முறையை எவ்வாறு அவர்கள் பார்த்தார்கள் என்பதைப் பற்றிய கூடுதல் நுண்ணறிவைக் கொடுத்தது. பிரிட்டிஷ் அதிகாரிகள், சர்வேயர்கள் மற்றும் நிர்வாகிகளால் செய்யப்பட்ட ஆவணங்களை தரம்பால் அணுகினார். 1858 க்கு முன்னர் கிழக்கிந்திய கம்பெனியுடன் தொடர்பு கொண்டிருந்த பிரிட்டிஷர்களின் படைப்புகளிலிருந்தும் பின்னர் பிரிட்டிஷ் ராஜ்யத்தின் காலத்தில் வெளியிடப்பட்ட படைப்புகளிலிருந்தும், அவர் மேற்கோள் காட்டியுள்ளார். அப்புத்தகத்திலிருந்து பிரித்தெடுத்த சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
வங்காளம், பஞ்சாப், மெட்ராஸ் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் ஆங்கிலேயர்கள் பள்ளிகளின் எண்ணிக்கை, எத்தனை மாணவர்கள் இந்த பள்ளிகளுக்குச் சென்றார்கள், பள்ளிகளில் உள்ள மாணவர்களின் புள்ளிவிவரங்கள், பள்ளியில் கற்பிக்கப்பட்ட பாடத்திட்டம், கற்பிப்பதற்கான முறைகள் மற்றும் கற்பித்தல் தொடர்பான விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனர். அவர்கள் இவ்வாய்வுகளில் தெரிந்துகொண்ட பல விஷயங்கள் “பிரிட்டிஷார் மேன்மைத்தன” நம்பிக்கையின் அஸ்திவாரத்தை உலுக்கியது.
கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒரு பள்ளியாவது இருப்பது கண்டறியப்பட்டது. கிராமத்தின் ஏறத்தாழ 100 சதவீத ஆண் குழந்தைகள் இப்பள்ளிக்குச் சென்றார்கள். அரிதாக, சில சிறுமிகளும் இருந்தனர். பெண்கள் தங்கள் கல்வியை தங்கள் பெற்றோரிடமிருந்தோ அல்லது ஆசிரியரிடமிருந்தோ வீட்டிலேயே பெற்றனர். இதேபோல், வசதியான மக்கள் தங்கள் குழந்தைகளுக்காக தனியார் ஆசிரியர்களை ஈடுபடுத்தினர்.
பாடசாலைகள் பலவிதமான சூழல்களில் நடத்தப்பட்டன - மாணவர்களின் வீடுகளிலோ, செல்வந்தரின் வீட்டிலோ அல்லது மரத்தடி நிழலிலோ அல்லது கூரை நிழற்றின் கீழேயோ நடத்தப்பட்டன. ஒவ்வொரு பள்ளியும் ஒரு ஆசிரியரையும் அவரது மாணவர்களையும் (அதிகபட்சம் 20 மாணவர்கள்) கொண்டிருந்தது. மாணவர்கள் 5-8 வயதிற்குள் கல்வியைத் தொடங்கினர், 12-14 வயதிற்குள் பள்ளிப்படிப்பை முடித்தனர். இதன் பின்னர் அவர்கள் தங்கள் குடும்பத் தொழிலை பின்தொடர்ந்தனர் அல்லது உயர்நிலை படிப்புக்காக குருகுலங்களுக்குச் சென்றனர். பள்ளி என்பதற்கு கட்டமைப்பு என்று எதுவும் இல்லாததால், தரவு சேகரிப்பை துல்லியமாக நிர்வகிப்பது ஆங்கிலேயர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது.
குழந்தைகள் எழுதுதல், படித்தல், எண்கணித விதிகள், வரிகளின் விதிகள் மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய விஷயங்களைக் கற்றுக்கொண்டனர். அவர்கள் ராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களைப் படிக்க வேண்டியிருந்தது. இஸ்லாமிய பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள் குரானைப் படித்தார்கள்.
நாம் நம்பிக்கொண்டிருப்பதற்க்கு மாறாக, நாடு முழுவதும் பள்ளிகளில் மிக உயர்ந்த சதவீதத்தில் சூத்ர சாதிகளிலிருந்து அதிகமான குழந்தைகள் இருந்தனர்(40 முதல் 65% வரை), அதே சமயம் பிராமண குழந்தைகளின் சதவீதம் குறைவாக இருந்தது (பெரும்பாலாக 15% க்கும் குறைவாக). இது மக்கள்தொகை சதவீதங்களுடன் நன்கு பொருந்தியிருந்தது. ஹரிஜன்களைத் தவிர, மற்ற குழந்தைகள் அனைவரும் ஒன்றாக பள்ளிக்குச் சென்றனர். மெக்காலேய முறையைப் பின்பற்றும் பள்ளிகள் நிறுவத் தொடங்கிய பின்னரும் இப்பள்ளிகள் பல தசாப்தங்களாக தொடர்ந்து செயல்பட்டு வந்தன.
ஜான் மால்கம் ஃபோர்ப்ஸ் லுட்லோ எனும் வரலாற்றாசிரியர் தனது பிரிட்டிஷ் இந்தியா (தொகுப்பு 1) புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்:
"தன் இயற்க்கை வடிவத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள ஒவ்வொரு இந்து கிராமத்திலும் ஞானத்தின் அடிப்படைகளை வழங்கப்படுகின்றன என்பதில் நான் உறுதி கொண்டுள்ளேன்; தீண்டத்தகாதோர் (சமுதாயத்தில் பங்கு பெறாதவர்கள்) குந்தைகளை தவிர வேறு எந்த ஒரு குழந்தைக்கும் படிக்கவோ, எழுதவோ, எண் கணக்கு தெரியாமலோ இல்லவே இல்லை, குறிப்பாக கடைசியில் குறிப்பிட்ட விஷயத்தில் அவர்கள் வல்லுநர்கள் என்று நான் கூறுவேன். ஆக, பள்ளிகள் தெளிவாய் நன்றாக செயல் படுத்திருந்த போதிலும் ஆங்கிலேயர்கள் ஏன் இந்தியாவில் ஒரு புதிய கல்வி முறையை நிறுவ விரும்பினர்?”
லுட்லோ அன்றே நியாயமாக கேட்ட கேள்விக்கு பதில் என்ன?
(அடுத்த பகுதியில் தொடரும்)
References:
Dharampal (2000). The Beautiful Tree, Other India Press. Available at: http://www.arvindguptatoys.com/arvindgupta/beautifultree.pdf
Ludlow, John Malcolm Forbes (1858). British India Vol 1, Macmillan and Co. Available at: https://archive.org/details/in.ernet.dli.2015.195586/page/n1/mode/2up