பாரதீய கல்வி (பகுதி - 1)
கல்வியைப் பற்றி பொதுவாக காதில் விழும் “உண்மைகள்”
நம் பெற்றோர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிரமங்களில் ஒன்று நமக்கு கல்வி கற்பிப்பது. பாலவாடி முதல் பள்ளி வரை, பின்னர் கல்லூரி… நமக்கு கல்வி கற்பிக்கும் கடமை நமக்கு வேலை கிடைக்கும் போதுதான் அவர்களுக்கு முடிகிறது. ஆக, நம்மளை பெற்று, நமக்கு வேலை கிடைக்கும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும், பிறகு நாமும் அதே செயல்களை வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டும். வேலைகள் மாறக்கூடும், ஆனால் வேலை பெறுவதே இறுதி நோக்கம்.
எனவே, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பயன் நம்மளை ஒரு வேலைக்கு தயார்படுத்துவதாகும். இது தற்போது நம்மிடம் உள்ள கல்வி முறையின் உண்மை, இது பாரதத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதேதான் உள்ளது. இது ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மேற்கத்திய கல்வி முறை. தாமஸ் பாபிங்டன் மெக்காலே என்ற பிரிட்டிஷ் நாட்டவர்1835 ஆம் ஆண்டில் இந்த முறையை அறிமுகப்படுத்த பரிந்துரைத்தார்.
அதற்கு முன்பு என்ன இருந்தது? பாரதத்தில் ஆங்கிலேயர்கள் பள்ளிகளை நிறுவும் வரை "உயர் சாதியினருக்கு" மட்டுமே கல்விக்கு அணுகல் இருந்ததாகக சொல்லப்படுகிறது. ஆங்கிலேயர்கள் இங்கு வரும் வரை பாமர மக்களுக்கு கல்வி கற்பிக்கும் (mass education) முறை நம்மளிடம் இல்லை என்று கூறப்படுகிறது. நம்மிடம் போதுமான அறிவியல் இல்லை என்றும் பாரம்பரிய அறிவு என்பது ஆய்வக ஆதரவின் சான்று இல்லாதது என்றும் நமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயங்களை நாம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம், இதை கேட்டு நமக்கு நம்மை, நம் சமுதாயத்தை, நம் சரித்திரத்தை எண்ணி அவமானப்படும் வண்ணம் உள்ளது. இவை உண்மைகள் என்பதை அறிய ஏதாவது வழி இருக்கிறதா? சரித்திர பதிவுகள் என்ன சொல்கின்றன?
பாரதீய வரலாறு சம்மந்தமாக நாம் காணும் மிகவும் பிரபலமான புத்தகங்கள் மார்க்சிய வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்டவை. அனைத்து பண்டைய மற்றும் பாரம்பரியமான கலாச்சாரங்களை இழிவுபடுத்துவதே மார்க்ஸிஸ்டுகளின் ஒரே குறிக்கோள். சமுதாயத்தை பலவீனமாக்குவதும் ஸ்திரமின்மையாக்குவதும் மட்டுமே இவர்களின் எண்ணம். சமுதாய மக்களை தங்களின் உண்மை சரித்திரத்திலிருந்து விலக்குவது இந்த குறிக்கோளை அடைய மிக சாதகமாக அமைகிறது. மக்கள் தங்கள் மூதாதிரியரின் சாதனைகளும் மகத்துவதிலிருந்தும் விலக விலக, மார்க்சிஸ்ட்டியர்கள் அவர்களின் எண்ணங்களை கையாளுவது எளிமையாகிறது. அவர்களின் எண்ணங்களை கையாளுவது எளிமை ஆக ஆக மார்க்சிஸ்டுகளின் சமுதாய மற்றும் அரசியல் சக்தி அதிகரிக்கின்றது. சுருக்கமாக, இதுவே நம் சரித்திர புத்தகங்கள் நமக்கு சந்தோஷமும் பெருமையும் அளிக்காமல் இருப்பதன் பின்னணி காரணம்.
நம் தலைப்புக்கு மீண்டும் செல்வோம். மெக்காலே முறையைப் நிறுவுவதற்கு முன்பு நம்மிடம் என்ன மாதிரியான கல்வி முறை இருந்தது, இதற்க்கு என்ன சான்றுகள் உள்ளன? அதிர்ஷ்டவசமாக, நம்மிடம் ஏராளமான சான்றுகள் உள்ளன, இன்னும் சிறப்பாக, சான்றுகள் பிரிட்டிஷாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, எவரும் நம்மை திரும்பி பார்த்து நாம் ஆதாரம் இல்லாமல் பேசுகிறோம் என்று சொல்ல எந்த வழியும் இல்லை. தரம்பல் எனும் வரலாற்றாசிரியர் இங்கிலாந்தின் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் நூலகத்தில் பணிபுரிந்து அங்கு அதிக நேரம் செலவிட்டு பிரிட்டிஷ் ஆட்சியின் போது செய்யப்பட்ட பதிவுகளை சேகரித்தார். அவருக்கு ஆய்வு செய்ய அனுமதி கிடைத்த அந்நூலகத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் பொது செய்யப்பட்ட பெரும்பாலான அசல் பதிவுகள் இன்னும் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றன. இந்த பதிவுகள் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1700-கள்) தேதியிட்டவை - இது பாரதீய சமூக அமைப்புகளை ஆங்கிலேயர்கள் புரிந்துகொள்ள முயன்ற காலம். மெக்காலேயின் காலத்திற்கு முன்னர் நமது கல்வி முறை பற்றி இந்த பதிவுகள் என்ன கூறுகின்றன? திரு தரம்பாலின் நூல் தொகுப்புகளில் நாம் என்ன காண்கிறோம்?
(அடுத்த பகுதியில் தொடரும்)