வீணாய் போன பள்ளி ஆண்டுகள்!

வீணாய் போன பள்ளி ஆண்டுகள்!

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பள்ளியில் படித்தப்போது, ​​நான் மிகவும் மகிழ்ச்சியான ஆரம்பக் கல்வியைப் பயின்றேன் - விஷயங்கள் பெரிய அளவில் அர்த்தமுள்ளதாகத் தோன்றின - மற்றும் மிகவும் குழப்பமான நடுநிலைப் பள்ளியும் முற்றிலும் துண்டிக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளிக் கல்வியாகவும் இருந்தன.

நான் நகரத்தில் வளர்ந்தேன் (அந்த நாட்களில், பள்ளிக்கல்வி என்று வரும்போது இது சாதகமாக இருந்தது), நான் ஒரு நல்ல பள்ளியில் சேர்க்கப்பட்டேன் (அரிதான CBSE பாடத்திட்டத்தை நடத்தும் ஆங்கில மொழி வழி பள்ளி) மற்றும் எனக்கு நன்றாக படிப்பு வந்தது. நான் பள்ளியை முடிக்கவும் கல்லூரி கல்வியை தொடரவும் உதவிய பெற்றோர்களை பெற்ற அதிர்ஷ்டசாலி. இதன் பொருள் என்னவென்றால், எல்லாம் சாதகமாக அமைந்து வந்த மாணவி நான்.

இருந்தபோதிலும், நான் கல்லூரியை அடைந்தபோது, ​​அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நிர்ணயித்த அளவுகோல்களை மதிப்பெண்களைப் பெறுவதற்காகவும் பள்ளியில் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையற்ற போராட்டம் நிறைய நான் மற்ற மாணவர்களோடு மேற்கொண்டதை உணர்ந்தேன். நான் செய்ய விரும்பாத விஷயங்களைச் செய்வதிலும், நான் ஒருபோதும் பயன்படுத்தாத பாடங்களைப் படிப்பதிலும் என் நேரம் நிறைய வீணடிக்கப்பட்டதை உணர்ந்தேன்!

ஜெர்மனி மற்றும் இத்தாலியை ஒன்றிணைப்பது, தான்சானியா, உருகுவே, ஐஸ்லாந்து மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொரு நாட்டின் புவியியல் பற்றி நான் படித்த எல்லா நேரமும் வீண் போன நேரமே. இதை தெரிந்து நான் என்ன செய்திருப்பேன்? ஜஹாங்கீர் ஷாஜஹானை சிறையில் தள்ளிய ஆண்டை மனப்பாடம் செய்ய நான் செலவழித்த நேரம் முழுவதும் எனக்கு வீண்  போன நேரம், இதை படிக்கும் பொது ஒரு மகன் ஏன் தன் தந்தைக்கு இதைச் செய்வான் என்ற யோசனை தான் வந்துகொண்டிருந்தது. எனது ஆங்கிலம் எனது ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களால் மிகவும் நன்றாக உள்ளதாக கருதப்பட்டாலும், இலக்கணக் கூறுகளின் பெயர்களைக் கற்றுக்கொள்ள நான்  செலவழித்த நேரம் என்னைப்பொறுத்தவரை வீணானதே. நான் ஹிந்தியில் படிக்கவும், புரிந்துகொள்ளவும், எழுதவும் கற்றுக்கொள்வதில் செலவழித்த நேரம் எல்லாம் வீணான நேரம்,  நான் விரும்பியது எல்லாம் ஹிந்தி பேச கற்றுக்கொள்வது தான்! இந்த நேர விரயம் அனைத்தும் எனது மத்திய மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆண்டுகளில் நடந்தது.

எனக்கு சில அற்புதமான கற்றல் அனுபவங்களும் இருந்தன! நான் கலை வகுப்புகளை விரும்பினேன் - நான் வகுப்பில் சிறந்தவர்களில் ஒருவராக இல்லாவிட்டாலும் - ஆனால் ஒரு வாரத்தில் எங்களிடம் ஒரே ஒரு கலை வகுப்பு மட்டுமே இருந்தது! நான் கைவினை வகுப்பை விரும்பினேன், குறிப்பாக நான் எம்பிராய்டரியை விரும்பினேன் ஆனால் மீண்டும் ஒரு வாரத்தில் ஒரு கைவினை வகுப்பு மட்டுமே இருந்தது.

நான் கணிதம் மற்றும் இயற்பியலை நேசித்தேன், ஐரோப்பாவின் வரலாறு அல்லது லத்தீன் அமெரிக்காவின் புவியியல் அல்லது கடினமான ஹிந்தி பாடல்களை எழுத வேண்டும் என்பதற்கு பதிலாக இந்த வகுப்புகளை மகிழ்ச்சியுடன் மாற்றிக் கொண்டிருப்பேன்! பின்னோக்கிப் பார்த்தால், நம் சொந்த நாட்டின், குறிப்பாகத் தமிழகத்தின் வரலாறாக இருந்தால், வரலாற்று வகுப்புகளை நான் விரும்பியிருப்பேன். நம் அரசர்கள் மற்றும் அரசிகளைப்பற்றியும், அவர்கள் நடத்திய போர்கள் மற்றும் அவர்கள் கட்டிய கோவில்களைப்பற்றியும்  தெரிந்து கொள்ள நான் ஆர்வம் காட்டிருப்பேன். உட்கார்ந்து எழுதி படிப்பதை விட முதலில் ஹிந்தி பேசக் கற்றுக்கொடுத்திருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இந்தி வகுப்புகளை ஏற்றுக்கொண்டிருப்பேன். இவ்வாறு உணர்வதில்லை நான் தனியாக இல்லை, நாங்கள் ரசித்த மற்றும் வெறுத்த  பாடங்களை குறித்து நண்பர்களிடையே விவாதித்தோம், இவை தீவிரமான கலந்துரையாடல்களாக இருந்தன. என் நெருங்கிய தோழி தனக்கு ஆர்வம் இல்லாத போதிலும்  அளவீடுகள் மற்றும் முக்கோணவியல் சூத்திரங்களை துண்டு சீட்டுகளில் எழுதி அதன் மூலம் அவற்றை கற்றுக்கொள்ள வேண்டியிருந்ததை வெறுத்தாள். ஒரு சில நண்பர்கள் பள்ளியில் விளையாட்டுகளில் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை நினைவூட்டும்போது பெருமூச்சு விடுகிறார்கள் - அவர்களுக்கு பள்ளியில் படிக்கும்போது விளையாட்டில் ஊக்கம் வேண்டிய அளவிற்கு கிடைக்கவில்லை என்ற குறை உள்ளது.

***

என் மகன் 2000களில் பள்ளிக்கல்வியைத் தொடங்கினான். இப்போதும் அதே கதையாக இருந்தது, ஒரே வித்தியாசம் என்னவென்றால், இப்போது மாணவர்கள் ஆங்கிலத்தில் சகஜமாக உரையாடும் அளவிற்கு நம் தாய் மொழி தமிழில் செய்ய முடியாமல் இருக்கிறார்கள்! வேறு எதுவும் மாறவில்லை.

எனது மகன்கள் இருவரும் CBSE பள்ளிகளுக்கு செல்வதை உறுதி செய்தேன். நுட்பமான சுயாதீன சிந்தனை என்று வரும்போது மாநில வாரிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் சிபிஎஸ்இ மாணவர்களை விட பின்தங்கியுள்ளனர். நான் மாணவியாக இருந்தபோது இப்படித்தான் இருந்தது, இன்று இந்த பிளவு  இன்னும் அதிகரித்துள்ளது. சிபிஎஸ்யிலும் தமிழ்நாடு மாநில வாரிய பள்ளிகளிழும்  வீணாய்ப்போகும் பள்ளி ஆண்டுகள் உள்ளன, ஆனால், மாநில வாரிய பள்ளிகளில் மாணவர்களின் திறனை அதிகரிக்க வழிகாட்டுதல் மிகவும் குறைவாக இருப்பதால் இவை மேலும் வீணாகிறது. சுருக்கமாகச் சொன்னால், கல்வி முறை கற்றலை  மாணவர்களுக்குத் தொடர்புடையதாக அமைக்கவில்லை.

***

விலைமதிப்பற்ற மாணவர் வருடங்களை வீணாக்கப்படாத கல்வியை கொடுக்கும் கல்விமுறை அமைக்கப்படுமா? காத்திருந்த எனக்கு NEP 2020 வடிவில் பதில் வந்தது. NEP 2020 இன் குறிக்கோள்கலை வரும் ஆண்டுகளில் யதார்த்தமாக மாறும் என்று எதிர்பார்ப்போம்; அதற்கு நம்மளால் செய்ய முடிவதை செய்வோம்.